திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் தலையில் காயம்பட்டு உயிரிழப்பு அதிக அளவில் ஏற்படுவதாகவும் அதனை தடுக்க அனைவரும் தலைக்கவசம் அவசியம் அணிய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன்,IPS வாகன ஓட்டிகள் 100 பேருக்கு இலவச தலை கவசம் வழங்கி வேண்டுகோள் விடுத்தார்.
பொன்னேரி அடுத்த சோழவரம் நல்லூர் சுங்கச்சாவடியில் வாகன விபத்துக்களை தடுக்கவும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை எண்ணூர் காட்டுப்பள்ளி சுற்றுவட்டார டிப்பர் லாரி மற்றும் உரிமையாளர் சங்கம் சார்பில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன்,IPS கலந்துகொண்டு 100 பேருக்கு இலவச தலைக் கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி பின்னர் பேசுகையில், எண்ணூர் காமராஜர் துறைமுக சாலை சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் சாலை விபத்தின் காரணமாக தலையில் காயம்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் அதனை தடுக்கும் வகையில் அனைவரும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
இதில் பொன்னேரி டி எஸ் பி கல்பனா தத், சோழவரம் காவல் ஆய்வாளர் நாகலிங்கம், பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி நடராஜன், டிப்பர் லாரி மற்றும் உரிமையாளர்கள் சங்க செயலாளர் எல். எஸ். கே. ஆர் சுரேஷ், துணைச் செயலாளர் சுதாகர், இணை செயலாளர் ராம்குமார் துணை தலைவர் லோகநாதன், சங்க நிர்வாகிகள் நிகேஷ் குமார், அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்