பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முக கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கியும் கொரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் பொது மக்களிடையே ஏற்படுத்தினார்.
மேலும் வாகன ஓட்டிகளிடம் இரவு நேரத்தில் பயணிக்கும்போது வாகன விபத்து ஏற்படாமல் இருக்கும் வகையில் ஒளிரும் பட்டைகள் வாகனத்தின் பின்புறம் ஒட்ட வேண்டும் என்றும் அவரது கைகளாலேயே வாகன ஓட்டிகளின் வாகனங்களில் ஒளிரும் பட்டைகளை ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியப்பிரகாசம் (தலைமையிடம்), துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை