சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் மீண்டும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானர் சாலை விபத்துகள் ஏற்படும் நிலைக்கு வாகன ஓட்டிகள் செல்லப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தீவிர போக்குவரத்து நெரிசலை சரி செய்தும், அவர்களை களத்தில் இறங்கி குண்டும் குழியுமான சாலைகளை சீரமைத்து வருகின்றனர்.
திருமங்கலம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட நொளம்பூர் சர்வீஸ் சாலை பாலத்தில் மழைநீர் தேங்கியதால் ஏற்பட்ட பள்ளத்தை முதல் நிலை காவலர் திரு.சீனிவாசன் (31063) அவர்கள் ரப்பீஸ் கொண்டு நிரப்பி போக்குவரத்தை சீராக்கினார். காவலரின் இச்செயலுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.