வேலூர் : வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ராஜேஷ்கண்ணன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு அஞ்சலி செலுத்த வெளி மாவட்டத்தில், இருந்து செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல அந்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வாடகை வாகனங்கள், திறந்தவெளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், டிராக்டர் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் இருந்து சொந்த வாகனங்கள் மூலம் செல்பவர்கள் வாகன எண், வாகன பதிவு சான்று, வாகன ஓட்டுனர் உரிமம், வாகனத்தில் பயணம் செய்வோர் விவரங்களை 8-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில், அளித்து வாகன அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம். அதை வாகனத்தில் ஒட்ட வேண்டும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்ல அனுமதிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்