சென்னை: வேப்பேரி காவல் நிலைய காவல் குழுவினர் நேற்று 22.6.2021 காலை பெரம்பூர் பேரக்ஸ் சாலை, டவுட்டன் சிக்னல் அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது, ஒரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 வாலிபர்களை காவல் குழுவினர் நிறுத்தச் சொன்னபோது, அந்த வாலிபர்கள் நிலைதடுமாறி , அங்கு பணியிலிருந்த ஆயுதப்படை பெண் காவலர் ராதா என்பவரின் கால் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதால், பெண் காவலர் சிறிய காயத்துடன் தப்பினார். உடனே, காவல் குழுவினர் 3 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்து , D – 6 அண்ணாசதுக்கம் போக்குவரத்து போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 18 வயது நிரம்பாத ஒரு இளஞ்சிறார் மற்றும் 17 வயதுடைய 2 இளஞ்சிறார்கள் என்பதும் , மூவரும் 11 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பதும் தெரியவந்தது . மேலும் , விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் காவலர் ராதா , விபத்து ஏற்படுத்தியவர்கள் மாணவர்கள் என்பதால் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதின்பேரில் , சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அறிவுரையின்படி , வழக்கு பதிவு செய்யாமல் , போக்குவரத்து காவல்துறையினர் , அவர்களுக்கு தகுந்த கலந்தாய்வு ஆலோசனை வழங்க முன் வந்தனர்.
அதன்பேரில் , போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் ( கிழக்கு ) திரு.நல்லதுரை தலைமையில் , D – 6 ) அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.இந்திரா மற்றும் காவல் குழுவினர் , விபத்து ஏற்படுத்திய 3 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை இன்று ( 23.6.2021 ) காலை , D – 6 ) அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு வரவழைத்து கலந்தாய்வு ஆலோசனை ( Counselling ) நடத்தி , தகுந்த அறிவுரைகள் வழங்கினர்