நெல்லை : நெல்லை மாநகரம் டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள் தெற்கு ரத வீதியில் குடியிருக்கும் சேகர்(48), என்பவருடைய வீட்டில் சந்தான கணேஷ் (28) என்பவர் குடுத்தனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் 19-08-2022ம் தேதியன்று புகார்தாரரான சேகர் என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த எதிரிகளின் வாகனத்தை புகார்தாரர் நகர்த்தும் போது ஏற்பட்ட பிரச்சனையில் எதிரிகள் சந்தான கணேஷ் (28), ஹாரிஸ் பாபு(25), சுப்பையா என்ற சுரேஷ்(29) மற்றும் பிரகதீஸ்வரன்(19) ஆகியோர் புகார்தாரரை மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசி கைகளால் தாக்கியுள்ளனர். மேலும் எதிரிகளான சந்தான கணேஷ் (28) மற்றும் ஹாரிஸ் பாபு(25) ஆகியோர் கல்லால் தாக்கியதால், திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிக்சை பெற்றுவரும் நிலையில் புகார்தாரர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் உதவி ஆய்வாளர் திரு. முருகேசன் அவர்கள் மற்றும் போலீசார் எதிரிகள் நான்கு கைது செய்து சிறையில் அடைத்தார்கள்