ஈரோடு : ஈரோடு கடத்தூர் கோபியை அடுத்த ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில், மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் , மற்றும் கடத்தூர் காவல்துறையினர், ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் கார் மற்றும் வேன் நின்று கொண்டிருந்ததை காவல்துறையினர் , கண்டனர். உடனே காவல்துறையினர், அந்த வாகனங்களை சோதனையிட்டனர். சோதனையின் போது அந்த 2 வாகனங்களிலும் பல்வேறு மூட்டைகளில் 3 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை பார்த்தனர். காவல்துறையினரை, கண்டதும் 2 வாகனங்களின் டிரைவர்களும் தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவரை போலீசார் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடினார்.
பின்னர் பிடிபட்டவரிடம் காவல்துறையினர் , விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் நம்பியூரை சேர்ந்த பிரசாந்த் (27), என்பதும், சரக்கு வேனில் ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும்,’ தெரியவந்தது. இதையடுத்து 3 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசி, வாகனங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் , பறிமுதல் செய்தனர். பிடிபட்ட டிரைவர் பிரசாந்தையும் ஈரோடு உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிரசாந்தை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :