சேலம் : சேலம் கடந்த (5.2.2023), ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் காரிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர் சுடுகாடு அருகே காட்டூர் ஆனந்தன் என்ற ஆனந்தராஜ் (44) ஆனந்தா தியேட்டர் அருகில் வலசையூர் என்பவர் அவரது நண்பர் பிரபாகரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த அன்பழகன் (40),பள்ளக்காடு கொல்லம்பட்டி, சக்திவேல் (35) சின்னநூர், காளிகவுண்டனூர், காட்டுவளவு, அஜித்குமார் (26) வெள்ளியம்பட்டி, சுக்கம்பட்டி, மணிகண்டன் (36) தாமரைநகர், கன்னங்குறிச்சி மற்றும் நான்கு நபர்கள் மேற்படி ஆனந்தனை வழிமறித்து முன்விரோதம் காரணமாக வெற்றி கொலை செய்தனர். மேற்படி கொலை சம்பவம் தொடர்பாக வாழப்பாடி உட்கோட்டம் காரிப்பட்டி காவல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் காவல் ஆய்வாளர் காரிப்பட்டி அவர்கள் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் இருப்பவர்கள் மீது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவகுமார் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின்கள் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததன் பேரில் (7/5/2023) அன்று மாவட்ட ஆட்சியர் திரு.கார் மேகம் அவர்கள் குற்றவாளிகளை குன்று தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்