திருநெல்வேலி : திருநெல்வேலி KTC நகர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண்மணி ஒருவரிடம் தங்கச் செயின் வழிப்பறி செய்த வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில்,
நடைபெற்று வந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட, பாளையங்கோட்டை, மனகாவலம் பிள்ளை நகரை சேர்ந்த அஸ்வின் ஹரிஹரசுதன் (23). மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு,
வழிப்பறி செய்த குற்றத்திற்காக (பிரிவு 392 IPC) மூன்று வருடங்கள் சிறை தண்டனையும், ரூ.2000/-அபராதமும் விதித்து (11.08.2025) அன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் திறம்பட சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா, காவல் ஆய்வாளர், சசிகுமார் மற்றும் தாலுகா காவல் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., வெகுவாக பாராட்டினார். நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சியங்களை விரைவாக ஆஜர்ப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில் மாவட்ட காவல் துறை தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்