திருவாரூர்: 2023 ஆம்ஆண்டு பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எண்ணக்குடி பள்ளியில் தமிழாசிரியராக பணி புரிந்து வரும் திருமதி.சக்திவிமலா என்பவர் பள்ளி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது பின்புறமாக இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக பேரளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் 1.கொரடாச்சேரி வடக்கு மாங்குடி பகுதியை சேர்ந்த இந்திரன் மகன் கோகுலேஷ் (வயது-22). மற்றும் 2.கூத்தாநல்லூர், கீரங்குடி பகுதியை சேர்ந்த தேவதாஸ் மகன் இமானுவேல் (வயது-19). ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, நன்னிலம் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணைக்கு பின் (03.10.2024) வழிப்பறி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த பேரளம் காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கு தொடர்பான நீதிமன்ற அலுவல் பணியை சிறப்பாக செய்த நீதிமன்ற காவலர் ஆகியோரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.