திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட -1.அருண்குமார் த/பெ முருகையன், காலனி தெரு, காட்டூர், திருவாரூர். 2. செல்வம், த/பெ தெட்சிணாமூர்த்தி, ஜீவா தெரு காட்டூர், திருவாரூர் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவ்வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, திருவாரூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணைக்கு பின் (10.03.2025) -1.அருண்குமார் த/பெ முருகையன், காலனி தெரு, காட்டூர், திருவாரூர். 2. செல்வம், த/பெ தெட்சிணாமூர்த்தி, ஜீவா தெரு காட்டூர், திருவாரூர் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை (ம) ரூபாய். 5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கு தொடர்பான நீதிமன்ற அலுவல் பணியை சிறப்பாக செய்த நீதிமன்ற காவலர் ஆகியோரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண்கரட், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
















