திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்பிளிக்கை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தங்கச்சியம்மாபட்டி பகுதியில், கடந்த (23.08.2022), ம் தேதி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த முத்துராஜ் (34), என்பவரை அம்பிளிக்கை காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். இந்நிலையில் முத்துராஜ் மீது ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் இருப்பதால் இவரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முத்துராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீசார் முத்துராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா