விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா, நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.பார்த்திபன், தலைமையில் காவல் ஆய்வாளர்கள் திரு,செல்வராஜ், திரு.ஆனந்தன் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.பிரபு, திரு.பிரகாஷ்,திரு.பாஸ்கர்,திரு.ராதாகிருஷ்ணன், மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், கொள்ளை கும்பல் திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிப்பாடி பகுதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 4 வாலிபர்கள் தப்பியோட முயன்றனர். உடனே அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விழுப்புரம் அழைத்து வந்து அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் 4 பேரும் திருவண்ணாமலை சிவா என்கிற ராக்கி (25), அருணாச்சலம் என்கிற ஷீல்டு (25), கலையரசன் (20), பாச்சல் பகுதியை சேர்ந்த சந்திரகேசன் மகன் வீரமணி (19), என்பது தெரிந்தது. நகை, செல்போன்கள் பறிமுதல் மேலும் விசாரணையில் இவர்கள்4பேரும்சேர்ந்துவிழுப்புரம்,காணை,திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி, கஞ்சனூர், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, களம்பூர், போளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அதிகாலை வேளையில் சாலைகளில் தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியும், தாக்கியும் நகைகள், பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்திருப்பதும், தெரியவந்துள்ளது. இதையடுத்து சிவா, அருணாச்சலம், கலையரசன், வீரமணி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.