திருச்சி:கடந்த 12.09.2019-ந்தேதி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய பகுதியில் வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவரிடம் கத்தியை காண்பித்து சட்டைபையில் இருந்த பணத்தை வழிப்பறி செய்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பபதிவு செய்து, வழக்கின் குற்றவாளியான உறையூர் சீனிவாச நகரை சேர்ந்த (குற்றவழக்கில் சந்தேகபடக்கூடிய நபர்) புஜ்ஜி @ இம்ரான் வயது 29, த.பெ.பெரியசாமி என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த 20.01.20-ந்தேதி மேற்படி குற்றவாளி புஜ்ஜி@ இம்ரான் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். மேற்படி வழக்கில் மாண்புமிகு திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அவர்களால் மேற்படி குற்றவாளி புஜ்ஜி @ இம்ரான் என்பவருக்கு 392 இ.த.ச பிரிவு -ன்படி 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், 397 இ.த.ச பிரிவு-ன்படி 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டு சிறைதண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் மற்றும் ரூ.3,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்திய அமர்வு நீதிமன்ற காவல்நிலைய காவல் ஆய்வாளர், காவல் ஆளிநர்கள் மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.