சென்னை: சென்னை வெள்ளானூரை சேர்ந்த செந்தில் முருகன், 40. என்பவர் கடந்த 03.10.2021 அன்று அவரது இருசக்கர வாகனத்தில் மோரை-அலமாதி ரோடு, AIETAC மகளிர் தொழில் பூங்கா (SIDCO) அருகில் சென்று கொண்டிருந்தபோது,
அடையாளம் தெரியாத 2 நபர்கள் அவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருத்த பணம் ரூ.510/- பறித்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முற்பட்டபோது,
செந்தில்முருகன் சத்தம் போடவே, சத்தம் கேட்டு சற்று தொலைவில் இரவு பணியிலிருந்த T-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.ஹரி கணேஷ் குற்றவாளிகளை துரத்திச் சென்று குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ், 35, வீராபுரம் என்பவரை மடக்கிபிடித்து, T-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது குறித்து T-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரமேஷை கைது செய்து ஒரு கத்தியை கைப்பற்றினர். மேலும் மேற்படி எதிரிமீது நீதிமன்றக் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த T-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.ஹரி கணேஷ் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 11.10.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்