சென்னை: சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த OLA கார் ஓட்டுநர் முரளி 28. என்பவர் 22.02.2022 அன்று அதிகாலை திருமங்கலம், பாடிகுப்பம் மெயின் ரோடு அருகே தனது காரை நிறுத்திவிட்டு காருக்குள் இருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் மேற்படி முரளியை மிரட்டி அவரிடமிருந்து ரூ.4,000/- பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். மேற்படி சம்பவம் குறித்து முரளி, V-5 திருமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
V-5 திருமங்கலம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1) மோகி 19.நெற்குன்றம், 2) லோகேஷ்வரன் 19.மதுரவாயல் ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4,000/– மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்ற குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்