கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் நேரு என்பவர் 03.12.2021 ஆம் தேதி மதியம் தன் இருசக்கர வாகனத்தில் இடைப்பையூர் செந்தில் மளிகை கடை பின்புறம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது.
அவ்வழியாக வந்த இரண்டு நபர்கள் திடீரென வழிமறித்து மிரட்டி இருசக்கர வாகனத்தையும், சட்டைப்பையில் வைத்திருந்த 5 ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து காவேரிப்பட்டணம் காவல் நிலைய போலீசார் பணம்,இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்ற இரண்டு நபர்களை 04.12.2021 ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.