திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகர் பகுதியில் கடந்த 01.12.2021- ம் தேதி பொதுமக்களிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் ஒட்டன்சத்திரம் வீர சின்னம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் 21. என்பவரை ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவரின் குற்ற நடவடிக்கை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் இ.ஆ.ப அவர்கள் குற்றவாளியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் நந்தகுமாரை பழனி சிறையில் இருந்து எடுத்து குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா