சென்னை: முத்தாபுதுப்பேட்டை, பாலவேடு டோல் கேட் அருகே 23.06.2021 அன்று அதிகாலை காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலூகாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பூபாலன், வ/41 என்பவர் தனது லோடு லாரியை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்த போது, அங்கு வந்த 7 நபர்கள் லாரி ஓட்டுநர் பூபாலனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 1 செல்போன் மற்றும் ரூ.1800/- பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
மேற்படி சம்பவம் குறித்து பூபாலன் T8 முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
T-8 முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட 6 சிறுவர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
அவர்களிடமிருந்து ரூ.500/- கைப்பற்றப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு செல்போனுடன் தலைமறைவாகியுள்ள நவீன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.