கோவை: கோவை சிவானந்தபுரம் வசந்தம் நகரை சேர்ந்தவர் வேல்கனி (40). தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக கணபதியில் உள்ள தனியார் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள், திடீரென்று வேல்கனி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கசங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்கனி கூச்சலிட்டார்.உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து சங்கிலி பறிப்பு ஆசாமிகளை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் வேகமாக தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்