சென்னை: சென்னை, மீன்பிடி துறைமுகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது. காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
சென்னை, தண்டையார்பேட்டை, பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் 27.12.2020 அன்று நாகூரான் தோட்டம், அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, 5 நபர்கள் கத்தியால் தாக்கி செல்போனை பறித்து சென்றது தொடர்பாக N-4 மீன்பிடிதுறைமுகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.நிர்மல், திரு.வெங்கடேசன், திரு.விநாயகம், தலைமைக் காவலர்கள் பழனிசுந்தரராஜ்(த.கா.21331), ஆரோக்கிய சகாயம் (த.கா.36335), முதல்நிலைக் காவலர்கள் பாண்டி (மு.நி.கா.29041), அன்பு செந்தட்டி (மு.நி.கா.31736) மற்றும் ஊர்க்காவல் படை வீரர் திரு.பாலபூபதி (HG 4929) ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை செய்து மேற்படி வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.பிரகாஷ்ராஜ் (எ) பிள்ளையார், (20), 2.நரேஷ்குமார் (எ) நரேஷ், (20), 3.ஶ்ரீபன், (20), 4.ராஜா (எ) தவக்களை, (19), 5லூர்துராஜ் (எ) லியோ, (19), ஆகிய 5 குற்றவாளிகளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் 3 கத்திகள் கைப்பற்றப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்