திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறியில் ஈடுபட்ட சதீஷ் (எ) சத்திய முகேஷ், மாரிதுரை மற்றும் முத்து தினேஷ் (எ) தினேஷ் ஆகியோரை சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.வீரகாந்தி அவர்கள் கைது செய்தார்.
இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 17.12.19 அன்று வழக்கில் தொடர்புடைய மூன்று பேருக்கும் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உயர்திரு.பாண்டி அவர்கள் தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இதையடுத்து மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா