சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை முதல் வீதியில் கடந்த மே மாதம் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு இருந்த போது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், ஒரு பெண் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை பறித்துச் சென்றான்.
மர்ம நபர்கள் குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து, பின்னர் குற்றவாளியை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரோகித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில், காரைக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அருண் அவர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடிய நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் கிடைத்த காட்சியின் தொடர்ச்சியாக சுமார் 10 கண்காணிப்பு காட்சிகளை பார்த்து குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டது.
பழைய குற்றவாளிகள் என்பதால் குற்றவாளி முத்துராமன் என்பவனை பிடித்து விசாரணை செய்தனர் காவல்துறையினர். குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிகள் முத்துராமன் (எ) முத்துராமலிங்கம் (30) மற்றும் பிரேம் (எ) பிரேம்குமார் (28) இதில், பிரேம் கரூர் கொலை வழக்கு சம்பந்தமாக திருச்சி மத்திய சிறையில் உள்ளான்.
பின்னர் . சேலத்தில் மறைந்து இருந்த குற்றவாளியை சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.சுரேந்திரன் மற்றும் பாண்டிச்சேரி குற்றப்பிரிவு காவலர் மணி ஆகியோர் பிடித்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாத்தூர் அருகில் கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிற்கு எதிராக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அந்த பெண்ணை எட்டி உதைத்து கீழே தள்ளி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனர்.
நபர்கள் குறித்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து, குற்றவாளியை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரோகித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில், காரைக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.டாக்டர்.அருண் அவர்கள் மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி, 20 கண்காணிப்பு கேமிரா காட்சிகளை பார்த்து குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டனர்.
குற்றவாளிகள் சிவக்குமார் (34) மற்றும் சேதுபதி (எ) பருத்திவீரன் (33) ஆகியோரை பிடித்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி