கோவை : கோவை மாநகர் சிங்காநல்லூர் காவல் நிலைய சரகம் ஒண்டிப்புதூர் சூர்யா நகரல் வசிக்கும் தீபா என்பவர் கடந்த 27/ 11/ 2020 ஆம் தேதி இரவு 9.30 அளவில் மகாத்மா காந்தி ரோடு அருகே தனது தோழியுடன் தனது காரில் வந்து கொண்டிருந்த போது. அங்கு அவரை வழிமறித்த சிலர். கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி. அவர் வந்த கார் மற்றும் காரில் இருந்த வீடியோகான் டிவி, லேப்டாப், அவர் பயன்படுத்தி வந்த செல்போன் மற்றும் வைத்திருந்த பணம் ரூபாய் 15,000 ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தீபா கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையர் கிழக்கு திரு.ஈஸ்வரன் அவர்களின் உத்தரவின் பேரில், சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் திரு.ராஜ்குமார், உதவி ஆய்வாளர் திரு.அர்ஜுன் குமார், காவலர்கள் ஜெகநாதன், சுகுமார், ரமேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை இன்று மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் திருப்பூர் கூத்தன் பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மேற்படி கொள்ளையடிக்கப்பட்ட ,கார், டிவி, லேப்டாப், செல்போன் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்