தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சரவணகுமார்(37), இவர் 25.01.2020 அன்று தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பில் வந்துகொண்டிருந்தபோது, தூத்துக்குடி இரண்டாம் இரயில்வே கேட் அருகே உள்ள கதிரேசன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் என்ற மாமணிகண்டன்(22) மற்றும் தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கார்த்திக்(34) ஆகிய இருவரும் சரவணகுமாரை வழிமறித்து ரூபாய் 500 பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து சரவணகுமார் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய போலீசார் மணிகண்டன் என்ற மாமணிகண்டன் மற்றும் கார்த்திக்கை கைது செய்தனர். மேற்படி எதிரி மணிகண்டன் என்ற மாமணிகண்டன் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் எதிரி மணிகண்டன் என்ற மாமணிகண்டன் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் மேற்படி எதிரி மணிகண்டன் என்ற மாமணிகண்டனை 21.02.2020 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி