சென்னை: மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சாகுல், வ/20, என்பவர் 13.06.2021 அன்று மதியம் சேலையூர், அகரம்தென் சந்திப்பில் உள்ள தனியார் நீச்சல் குளம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது,
அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத 5 நபர்கள் சாகுலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.1000/- மற்றும் 1 செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து சாகுல், S-15 சேலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
S-15 சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 1.சரவணன், (வ/25), சேலையூர் 2.அரவிந்தன், (வ/20) வேங்கைவாசல் 3.மனோ, (வ/21) வேங்கைவாசல் 4.வினோத், (வ/25) சேலையூர் 5.கௌதம் (எ) அப்பு, (வ/25) கிழக்கு தாம்பரம் ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கத்தி கைப்பற்றப்பட்டது. மேலும் மேற்படி குற்ற எதிரிகள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.