திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பாவூர் கிராமத்தை சேர்ந்த சத்யா த/பெ ஏகாம்பரம் என்பவர், 11.02.2022-ந் தேதி மாலை சுமார் 07.00 மணிக்கு தனது கனவருடன் காஞ்சிபுரம் மெடிக்கலுக்கு சென்று பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்லும் வழியில் தூசி கிராமத்தை தாண்டி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் தனது கழுத்தில் இருந்த 4 1/2 சவரன் தங்க செயினை பறித்துவிட்டதாக தூசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருவண்ணாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி செய்யாறு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.V.E.செந்தில் அவர்களின் தலைமையில் தூசி வட்ட காவல் ஆய்வாளர் திரு.A.அண்ணாதுரை, உதவி ஆய்வாளர் திரு.J.C.சுரேஷ்பாபு மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரனை செய்து தேடி வந்த நிலையில், தடயங்கள் மூலமாக அவர்களை அப்துல்லாபுரம் கூட்டுச்சாலையில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்தனர். வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த இருவர் இறங்கியதும் வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் வாகனத்துடன் தப்பி ஒடிவிட்டான்.
இதை கண்ட காவல்துரையினர் சந்தேகப்பட்டு அவர்களை மடக்கி பிடித்து விசாரனை செய்த போது பின்னர் காஞ்சிபுரம் மாவட்டம், திருக்காளிமேடு, எம்.ஜி.சக்கரபானி தெருவை சேர்ந்த கணபதி 24 என்பதும் மற்றுமொருவர் காஞ்சிபுரம் மாவட்டம், பழைய ரயில்வே நிலையம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் தெருவை சேர்ந்த தாமு (எ) தாமோதிரன் 21 என்பதும், இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றது அவ்வாகனத்தின் உரிமையாளர் சங்கர் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் விசாரனை செய்ததன் மூலம் மூவரும் மேற்படி வாதி சாத்யா என்பவரிடம் நகையை பறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், 03.03.2022 அன்று பகல் சுமார் 02.00 மணியளவில் தூசி பஸ்டாப் அருகே தூசி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் சுண்டல் கடையில் சுண்டல் சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டதற்கு பணம் தரமறுத்து, பின்னர் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூபாய்2000/- பணத்தையும் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் காஞ்சிபுரம் விஷ்ணு காவல் நிலையத்தில் இவர்கள் மீது பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
மேற்படி இருவரையும் கைது செய்து தூசி காவல்துறையினர் கணபதி மற்றும் தாமோதரன் இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர் செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் அவர்களிடம் இருந்து 3 1/2 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 550/- பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் வாகனத்தை ஓட்டிச் சென்ற சங்கரை காவல் துரையினர் தேடி வருகின்றனர்.