திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த சையத் ஷாஜகான் என்பவர் சுமார் 15 ஆண்டு காலமாக களம்பூரில் தள்ளுவண்டியில் டிபன் மற்றும் சிக்கன் பக்கோடா கடை நடத்திவருவதாகவும், 27.02.2022-ந் தேதி காலை 09.00 மணிக்கு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது பதிவெண் இல்லாத வெள்ளை நிற பல்சர் இருச்ககர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்ததாகவும்,
மேலும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூ3000/-த்தை பறித்துக்கொண்டு சென்றதாகவும் களம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் திருவண்ணாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.N.கோட்டீஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரணி நகர காவல் ஆய்வாளர் திரு.P.கோகுல்ராஜன், மாவட்ட தனிப்படை உதவி ஆய்வளார் திரு.M.சத்யாநந்தன் மற்றும் தனிப்படை காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரனை செய்து வந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களை கஸ்தம்பாடி, வடமாதிமங்கலம் பகுதிகளில் தேடி பின்னர் எட்டிவாடி கூட்ரோட்டில் வாகன தனிக்கை செய்துகொண்டிருந்த போது அந்த வழியாக வேலூர் நோக்கி வந்த வெள்ளை நிற பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த இருநபர்கள் வந்த வழியே திரும்பி செல்ல முயன்றனர்.
இதை கண்ட காவல்துரையினர் சந்தேகப்பட்டு அவர்களை மடக்கி பிடித்து விசாரனை செய்த போது முன்னுக்குப்பின் முரனாக பேசி பின்னர் திருவண்ணாமலை, மாந்தோப்பை சேர்ந்த அப்பு (எ) மணிகண்டன் 27 என்பதும் மற்றுமொருவர் 18 வயது பூர்த்தியடையாத இளஞ்சிறார் என்பதும் தெரியவந்தது.
இருவரும் மேற்படி சையத் ஷாஜகான் என்பவரிடம் கத்தியைக் காட்டி ரூ3000/- பணம் பறித்ததவர்கள் என்பதும், மேலும் கஸ்தம்பாடி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பின்பகுதியில் அமர்ந்து சென்ற பெண்ணிடம் தங்க செயினை பறித்தவர்கள் என்பதும், போளூர் வழ ஆரணி சாலை ஆலம்பூண்டி கூட்ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் கத்தியை காட்டி செல்போன் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேற்படி இருவரையும் கைது செய்து களம்பூர் காவல்துறையினர் மணிகண்டனை நீதி மன்றத்தில் ஆஜர் செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பினர். 18 வயது பூர்த்தியடையாத இளஞ்சிறாரை இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மேலும் அவர்களிடம் இருந்து 2 சவரன் தங்க கட்டி, ரூபாய் 2000/– பணம், 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்