காஞ்சி: ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சூர்யாதேவி காம்லெக்ஸில் தங்கிக்கொண்டு எரையூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கொத்தனாராக வேலை செய்யும் தேவேந்திரன் 45 மற்றும் அவரது நண்பர் காமராஜ் 44 , ஆகிய இருவரும் 08.09.2021 அன்று 21.00 மணியளவில் கூலிப்பணம் ரூ.14,600 வாங்கிக்கொண்டு அவர்கள் தங்கியிருக்கும் சூர்யாதேவி காம்லெக்ஸ் அருகே வரும்போது .
அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் வழிமடக்கி கத்தியால் இருவரையும் தாக்கி தேவேந்திரனிடமிருந்து ரூ.14,600- பணத்தையும், காமராஜிடமிருந்து நோக்கியா கைப்பேசியையும் பறித்துச்சென்றதாக ஒரகடம் காவல்நிலையத்தில் 09.09.2021 அன்று தேவேந்திரன் அளித்த புகாரின் பேரில் வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கினை துரிதமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர், அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் , காவல் ஆய்வாளர் திரு.சுரேந்திரகுமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் செங்கல்பட்டு மாவட்டம், அப்பூரைச் சேர்ந்த
1 ) கணபதி 20 2 ) கண்ணன் 20 3 ) மணி ( எ ) பாட்டில் மணி 19 ஆகியோர்களை கைது செய்து .
அவர்களிடமிருந்து இரண்டு கத்திகள், செல்போன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு..Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்