சென்னை: வானகரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன், வ/28, கடந்த 07.3.2021 அன்று இராமாபுரம், பாரதி சாலையிலுள்ள SRM கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் ஆனந்தனை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.300/- மற்றும் 1 செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து ஆனந்தன் R-11 இராயலாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-11 இராயலாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பழைய குற்றவாளி 1.சுரேஷ் (எ) இராமாபுரம் சுரேஷ், வ/41, இராமாபுரம், 2.ரூபேஷ், வ/20, இராமாபுரம், ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 1 செல்போன், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.