கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திம்மாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வாதி நடந்து சென்று கொண்டிருந்தபோது குற்றவாளி தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி நான் இந்த ஏரியாவின் பெரிய ரவுடி, எனக்கு தீபாவளிக்கு நிறைய செலவு இருக்கிறது.
என்று கூறி வாதி சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொடு இல்லை என்றால் அடித்தே கொன்று விடுவேன் என மிரட்டி சட்டைப்பையில் வைத்திருந்த 200/– ரூபாயை பறித்துக்கொண்டு சென்று விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டிணம் காவல்துறையினர் வழிப்பறி செய்த நபரை கைது செய்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்