திருநெல்வேலி : பணக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்கிணறு பகுதியில் கடந்த 19.12.2019 அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் பெண்ணின் 15 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.
சந்தேக நபரின் முகம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.இதனடிப்படையில் குற்றவாளியை உடனடியாக பிடிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார்.
பின்பு வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு ஹரிகிரன் பிரசாத் இ.கா.ப அவர்கள் தலைமையில்
ஆய்வாளர் திரு சாகுல் ஹமீது, உதவி ஆய்வாளர் திரு அய்யனார், திரு அருண்ராஜா திரு நம்பியார்,திரு அண்டோ பிரதீப் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
விசாரணையின்போது வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கூடங்குளத்தை சேர்ந்த அஜித்குமார்(21) வைராவிகிணறு பகுதியை சேர்ந்தவர் தெரியவந்தது. இவர் மீது ராதாபுரம் கூடங்குளம் காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்கு இருந்து வந்துள்ளது.
அஜீத் குமாரை விசாரணை செய்ததில் வழிப்பறியில் ஈடுபட்டது வீரகேரளம்புதூர் அச்சங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் ராமராஜ்(28) மற்றும் மேலப்பாளையம், மேல கருங்குளம் பகுதியை சேர்ந்த அங்கமுத்து மகன் பட்டமுத்து(18) என்பவரும் மற்றும் தூத்துக்குடி லெவன்சி புரம் பகுதியை சேர்ந்த வேல்சாமி என்பவரது மகன் மாரிச்செல்வம்(20) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபடுவது தெரிய வந்தது .
பின்பு மூன்று நபர்களையும் தனிப்படை காவல்துறையினர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் பதுங்கியிருந்தோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
அவர்களிடமிருந்து 27 பவுன் தங்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தீவிரமாக விசாரணை செய்து உடனடியாக வழிப்பறியில் ஈடுபட்டோரை கைது செய்த தனிப்படை காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.