சென்னை : எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கையால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் வாகன ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் .
R-10 எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய சுற்றுக்காவல் பொறுப்பாளர்/ உதவி ஆய்வாளர் திருமதி.L.பூவரசி மற்றும் காவல் வாகன ஓட்டுநர்/ முதல்நிலைக் காவலர் S.அகஸ்டின் (மு.நி.கா.31197) ஆகியோர் கடந்த 10.12.2019 அன்று இரவு காசி தியேட்டர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, நள்ளிரவு சுமார் 12.45 மணிக்கு ஒரு நபர் உதவி ஆய்வாளர் பூவரசியிடம், சற்று தொலைவில், ஆர்டிஓ அலுவலகம் அருகே ஒரு நபரை 2 பேர் தாக்கி கொண்டிருப்பதாக கூறினார். உடனே, உதவி ஆய்வாளர் பூவரசி, காவல் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அங்கு நேபாளத்தைச் சேர்ந்த ஒரு நபரை 2 நபர்கள் தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை அபகரித்துக் கொண்டு டியோ இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றனர்.
அவர்களை உதவி ஆய்வாளர் பூவரசி மற்றும் மற்றும் முதல் நிலைக் காவலர் அகஸ்டின் ஆகியோர் காவல் வாகனத் நிறுத்தி, அவர்களை துரத்திச் சென்று குற்றவாளிகளில் ஒருவரை மடக்கிப் பிடிக்க மற்றொரு குற்றவாளி தப்பிச் சென்றார். பிடிபட்ட குற்றவாளி அரவிந்தை R-10 எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து தப்பிச் சென்ற மற்றொரு குற்றவாளியான தமிழ்செல்வனையும் போலீசார் கைது செய்தனர்.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்த முதல்நிலைக் காவலர் S.அகஸ்டின் (மு.நி.கா.31197), உதவி ஆய்வாளர் திருமதி.L.பூவரசி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் நேற்று (12.12.2019) நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை