காஞ்சி: காஞ்சிபுரம் உட்கோட்டம், சாலவாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரம், பள்ளத்தெருவைச் சேர்ந்த கொலக்கியம்மாள ( 57 ), க/பெ.பெருமாள் என்பவர் 27.08.2021 அன்று 17.00 மணிக்கு சங்கராபுரம், இரயில்வேகேட் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, அப்போது அவருக்கு பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் மேற்படி கொலக்கியம்மாவை கீழே தள்ளிவிட்டு அவரது வலது காதில் அணிந்திருந்த கம்மல் மற்றும் முக்கில் அணிந்திருந்த முக்குத்தி ஆகியவற்றை பறித்துச் சென்றது.
சம்மந்தமாக சாலவாக்கம் காவல்நிலையத்தில் 29.08.2021 அன்று கொலக்கியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கினை துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரியை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் தலைமையில்
தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் உள்ளாவூரைச் சேர்ந்த தமிழ்மணி 34 என்பவர் மேற்படி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்ததையடுத்து தமிழ்மணியை கைது செய்து அவரிடமிருந்து களவு நகைகள் மீட்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திருM.சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.