திருவண்ணாமலை: திருவண்ணாமலைமாவட்டத்தை சோர்ந்த நபர் காய்கறி வியாபாரம் செய்து வருவதாகவும், தினமும் அதிகாலையில் தனது இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலை நகருக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வதை வழக்காமாக கொண்டிருப்பதை அறிந்த வழிப்பறி கொள்ளையர்கள் திருவண்ணாமலை to மணலூர்பேட்டை செல்லும் சாலையில் தென்மாத்தூர் கூட்ரோடு அருகே, கத்தியை காட்டி தன்னிடமிருந்த ஒரு செல்போன் மற்றும் ரூபாய் 5200 ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டதாகவும்,
மேலும் லோகநாதன் வ/39 த/பெ முனுசாமி, காந்தி நகர், சாங்கியம் கிராமம், திருக்கோவிலூர் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டைத்தை சேர்ந்த நபர் தான் மீன் வியாபாரம் செய்து வருவதாகவும், தினமும் அதிகாலையில் தனது இருச்சக்கர வாகனத்தில் திருவண்ணாமலை நகரில் தாமரைகுளம் அருகே மீன் வாங்க செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதை அறிந்த வழிப்பறி கொள்ளையர்கள் திருவண்ணாமலை to மணலூர்பேட்டை செல்லும் சாலையில் தென்மாத்தூர் கூட்ரோடு அருகே, கத்தியை காட்டி மிரட்டி தன்னிடமிருந்த ஒரு செல்போன் மற்றும் ரூபாய் 5000 பணத்தை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிட்டதாகவும்,
இருவரும் தச்சம்பட்டு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரினையடுத்து, வெறையூர் வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.C.அழகுராணி அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில்,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பாச்சல் அஞ்சல், கண்ணக்குருக்கை கிராமம், இந்திரா நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் 22 மற்றும் திருவண்ணாமலை, 98-LGS நகரை சேர்ந்த அருணாசலம் 20, ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டது. அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு கத்தி, மற்றும் ரூபாய் 1600/- பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கண்ட எதிரிகள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.B.முருகேஷ், இ.கா.ப., அவர்கள், திரு.சந்தோஷ்குமார் மற்றும் அருணாசலத்தை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.