திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தோக்கவாடி கிராமம், வடக்கு தெருவை சேர்ந்த விக்னேஷ் (எ) சஞ்சலான் 30, பழனி 51. என்பவரிடம் மேல்புழுதியூர் பழைய பேருந்து பணிமனை எதிரில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக செங்கம் காவல் ஆய்வாளர் திரு.K.சரவணன் அவர்கள் செங்கம் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து, குற்றவாளியை சிறையில் அடைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமம், நாத கொல்லை தெருவை சேர்ந்த முருகன் 27. குணசேகரன் என்பவரின் வீட்டில் புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் திரு.S.சாலமன் ராஜா அவர்கள் கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து, குற்றவாளியை சிறையில் அடைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடி கிராமம், தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்த பெருமாள் 40, என்பவர் அப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக கீழ்ப்பெண்ணாத்தூர் காவல் ஆய்வாளர் திரு.B.லட்சுமி பதி அவர்கள் கீழ்பெண்ணாத்தூர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து, குற்றவாளியை சிறையில் அடைத்தார்.
மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்