காஞ்சி: காஞ்சிபுரம் உட்கோட்டம், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழம்பி ஏரிக்கரையில் மலர் (40) க/பெ.சங்கர் என்பவர் 03.08.21 – அன்று கீழம்பி ஏரியில் மாடு மேய்த்துவிட்டு வேப்பமரத்தடியில் அமர்ந்துகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர், மலரின் கழுத்து மற்றும் வாயை அழுத்தி பிடித்ததால் மலர் மயங்கியுள்ளார்.
அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன தங்க நகைகளை (3 சவரன் தாலி மற்றும் 2 சவரன் செயின்) பறித்துச் சென்றுவிட்டதாக அவரது மகன் வினோத்குமார் பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள *காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர், அவர்கள் உத்தரவிட்டதின் காரணமாக 05.08.21 அன்று வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இவ்வழக்கினை சிறப்பாக விசாரணை செய்த தனிப்பிரிவு த.கா.1347 திரு.சோமசுந்தரம் அவர்கள் மேற்படி குற்றச்சம்பவத்தில் சீராளன் (39) என்பவர் ஈடுபட்டிருப்பதாக தகவல் தெரிந்ததையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வேலாயுதம் மற்றும் த.கா.1652 திரு.குமார், காவலர் 2399 திரு.சீனிவாசன், காவலர் 3144 திரு.பிரேம்குமார், கா 3180 திரு.மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் உதவியுடன் மேற்படி எதிரியை கைதுசெய்து அவரிடமிருந்து வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சிறப்பாகவும் புலன்விசாரணை மேற்கொண்டு மற்றும் விரைவாகவும் செயல்பட்டு வழிப்பறி வழக்கு பதிவுசெய்த 24 மணி நேரத்திற்குள் எதிரியை கைது செய்ய உதவிய பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலைய தனிப்பிரிவு த.கா 1347 திரு.சோமசுந்தரம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வேலாயுதம் மற்றும் அவரது குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்