தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் திருவிடை மருதூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொண்ட கும்பல் ஒன்று ஆயுதங்களை வைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி பணம், நகை, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்து வருவதாகவும், இப்பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகமாக திருடு போவதாகவும் வந்த புகார்களை தொடர்ந்து இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் கும்பலை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆசிஷ்ராவத் ஐ.பி.எஸ் அவர்கள், உத்தரவின் படி கும்பகோணம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்திரு.கீர்த்திவாசன் டி.பி.எஸ் மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜா ஆகியோர் மேற்பார்வையில் கும்பகோணம் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன் தலைமையில்மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்திரு.ராஜேஷ் காவலர்கள்சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார், தலைமைக் காவலர் பாலசுப்ரமணியம், செந்தில்குமார்,சுரேஷ், சரவணன்,திலீப்குமார் Gr I நாடிமுத்து, ஜனார்த்தனன், ராஜ்குமார், வேளாங்கண்ணி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர வாகன சோதனைகள் மேற்கொண்டுள்ளன.
சி.சி.டிவி கேமராவில் கண்காணித்து வந்ததில் மேற்படி சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கும்பகோணம் செக்காங்கண்ணி பகுதியை சேர்ந்த ஜான் பென்னி மகன் 1 பிரவீன் குமார் (21). அதே பகுதியை சேர்ந்த பாபு மகன் சூர்யா (24) . கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் ஒத்தைதெருவில் வசித்து வரும் செல்லதுரை மகன் ஹரிபாலாஜி (20). அதே பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் ஆகாஷ் (20). கும்பகோணம் விவேகானந்த நகர் பகுதியில் வாசிக்கும் நல்லதம்பி மகன் அருண் (20). ஆகியோர் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மேற்படி நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 13 விலை உயர்ந்த செல்போன்கள் ஐந்து இருசக்கர வாகனங்கள் , பத்து கிராம் தங்கச்செயின், இரண்டு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தார்கள் . மேலும் கைது செய்யப்பட்ட பிரவீன்குமார், ஹரிபாலாஜி, சூர்யா ஆகியோர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.மேற்படி ஐந்து நபர்களையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் (8-9-2023) ஆஜர்படுத்தி பின்னர் குற்றவாளிகள் புதுக்கோட்டை கிளைச் சிறைசாலையில் அடைக்கப்பட்டார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்