பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய நபர்களின் மீது வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவால கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக முக கவசம், சனிடைசர் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று 18.05.2021-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 122 வழக்குகள் பதிவு செய்து 121 இரு சக்கர வாகனம் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 122 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.