செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது ஷூ வை வீசிய வழக்கறிஞர் ராகேஷ். நீதித்துறைக்கு
நீங்காத களங்கம் ஏற்படுத்தியுள்ளார். நீதித்துறையையும் அரசியல் சட்டத்தையும் பாதுகாக்கும் நாட்டின் தலைமை நீதிபதி மீது ஷூவை வீசி அவமானப்படுத்தியுள்ளார். இதனை கண்டித்து செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக செங்கல்பட்டு வழக்கறிஞர் சங்கத் தலைவர் மகேஷ் குமார், தலைமையில் செயலாளர் செல்வகுமார், பொருளாளர் சுதன், துணைத் தலைவர் முருகன், பெண்களுக்கான துணைத் தலைவர் தேவதர்ஷினி, இணைச்செயலாளர் ரகுபதி,நூலக தீபா முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி இந்திய இறையாண்மைக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் செயல்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை கோரி இந்திய பார் கவுன்சிலுக்கும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலுக்கும் டெல்லி காவல்துறைக்கும் நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று ஒரு நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து கொண்டு கண்டனம் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்