செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பாக (5.12.2024) காலை 11.30 மணி அளவில் செங்கல்பட்டு நீதிமன்ற நுழைவாயிலில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள டாக்டர் பி ஆர் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைவிடம் வரைக்கும் வழக்கறிஞர்கள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் *வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய ,மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தியும் மற்றும் *செங்கல்பட்டு வழக்கறிஞர் சங்க உறுப்பினர் எம் ஜெகதீசன் அவர்கள் கடந்த 25.11.2024 அன்று 65 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டியை சிவில் வழக்கில் ஏன் காவல் நிலையம் அழைத்து விசாரணை என்ற பெயரில் மிரட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்காக மறைமலைநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் அவர்கள் வழக்கறிஞர் ஜெகதீசனை வாடா போடா என்றும் காவல் நிலையத்திற்கு வருகிற வக்கீல் லாய்க்கு இல்லாத வழக்கறிஞர்கள் என்றும் அவதூறாக பேசி மார்பின் மீது கையால் குத்தியும்,லத்தியை காண்பித்து கை கால்களை உடைத்து.
லாக்கப்பில் போட்டு கொன்று விடுவேன் என்று மிரட்டியும் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு அவதூறாக பேசியும் தனக்கு ஏற்பட்ட காயத்திற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மூன்று நாட்களாக உள் நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த வழக்கறிஞர் ஜெகதீசன் அவர்களுக்கு நியாயம் வழங்க கோரியும் வழக்கறிஞரை தாக்கிய மறைமலைநகர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும், 2016 ஆம் ஆண்டு கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியிலிருந்த போது இதே கிருஷ்ணகுமார் அவர்களால் தாக்குதலுக்குள்ளானஹேமராஜ் என்ற வழக்கறிஞருக்கும் நியாயம் வழங்க கோரியும் மற்றும் தமிழக அளவில் நீதிமன்ற நுழைவாயில் முன்பாகவும் பணியிடங்களிலும் காவல் நிலையங்களிலும் சமூக விரோதிகளாலும் தொடர்ந்து வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவதால் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் செங்கல்பட்டு பார் அசோசியேஷன் முன்னாள் தலைவர் திரு சி பாலகிருஷ்ணன், செங்கல்பட்டு பார் அசோசியேஷன் முன்னாள் தலைவர் மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் திரு போர்வாள் ஏ.கே.சோமசுந்தரம், தற்போதைய செங்கல்பட்டு பார் அசோசியேஷன் துணைத் தலைவர் திரு எம் இளங்கோவன், மற்றும் செங்கல்பட்டு பார் அசோசியேஷன் வழக்கறிஞர்கள் வல்லம் ஜெயகுமார் ,ஜெயபிரபு ராஜன், என் பெருமாள் , பலராமன் ,எம் சசிகுமார், எஸ் சசிகுமார், ஏ சுரேஷ்குமார், ஏ அசோக்குமார், முனி செல்வம் , த கொளதம், கே செல்வகுமார், செங்கை செல்லா, ஏ மனோஜ் குமார், வீ மணிகண்டன், ஆர் இளங்கோவன், ஆர் விவேக், இ ரகுபதி, ஏ சரவணன், ரவீந்திரன், ஆர் சையது நசீர், கே கிச்சா, ஆர் பூபாலன், ஏ தனூஷ்கோடி, சக்தி வேல், ஹரிகிருஷ்ணன், சிவபிரசாத் , தமிழ், பாபு, எமலன், இ சூரிய பிரபாகரன், ராஜசேகர பாண்டியன், அஞ்சூர் சேகர், மித்ரன் மற்றும் திருப்பெரும்பூதூர் வழக்கறிஞர்கள், திருக்கழுக்குன்றம் வழக்கறிஞர்கள், திருப்போரூர் வழக்கறிஞர்கள், உத்திரமேரூர் வழக்கறிஞர்கள் சென்னை வழக்கறிஞர்கள் மற்றும் செங்கல்பட்டு பார் அசோசியேசன் செயற்குழு உறுப்பினர்கள், செங்கல்பட்டு பார் அசோசியேஷன் பெண் வழக்கறிஞர்கள் என 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டார்கள். வழக்கறிஞர்களின் இந்த மாபெரும் பேரணிக்கு செங்கல்பட்டு வழக்கறிஞர் சங்கம் (CAA) ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். இந்தப் பேரணியின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் அவர்களையும், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களையும் சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என்று முடிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்