திருச்சி : திருச்சி மாவட்டம், முசிறி SB திருமண மண்டபத்தில், வளரிளம் பருவ குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து அவசியம், சுகாதாரம்,பாரம்பரிய விளையாட்டு,மற்றும் கொரோனா தொற்று காலத்தில் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்,முகக்கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை எவ்வாறு பின்பற்ற வேண்டும், தன் சுத்தத்துடன் தூய்மையாக எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு குறித்து முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உடன் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.அஜீம், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லட்சுமி, காவல் ஆய்வாளர் திரு பால்ராஜ், உதவி காவல் ஆய்வாளர் திரு.ராஜீவ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.