கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில், பெங்களூர் To கிருஷ்ணகிரி NH ரோட்டில் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹96,000/- ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்த மூன்று நபர்களை கைது செய்து, புகையிலை பொருட்கள், வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.