சென்னை: பொன்னேரி மீஞ்சூர் அடுத்த மேலூர் ஜோசப் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் 24 கூலித்தொழிலாளி இவர் நேற்று எண்ணூர் அடுத்த கத்திவாக்கம் பகுதிக்கு சென்ட்ரிங் வேலைக்கு செல்வதற்காக நந்தியம்பாக்கம் இரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு 9.30 மணிக்கு வீடு திரும்பியபோது.
நிறுத்திய தனது வாகனத்தில் இருவர் பெட்ரோலை திருடிக்கொண்டிருந்ததை பார்த்து தட்டிக்கேட்டு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் பெட்ரோல் திருடியவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஷ் தலையில் சரமாரியாக வெட்டியதை பார்த்து ரயில் பயணிகள் சிதறி ஓடினர்.
மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கண்டிருந்த ராஜேஷை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் சிகிச்சை பலனளிக்காமல் இன்று விடியற்காலை 3 மணிக்கு இறந்துவிட்டார்.இதனிடையே வெட்டிவிட்டு தப்பி சென்ற இருவர் மீஞ்சூர் அடுத்த மவுத்தம் பேட்டில் தங்கியிருப்பதாக மீஞ்சூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இரவு வீட்டில் சுற்றிவளைத்து மௌத்தம் பேட்டை சேர்ந்த ராஜேஷ்( எ) அப்பு 24 நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தமிழ் 24 இருவரையும் மீஞ்சூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.]