இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா கதாரிக்குப்பத்தில் உள்ள ஏரியில் லாரிகள் மூலம் மண் கடத்துவதாக ஆட்சியர் வளர்மதிக்கு புகார் சென்றது. ஆட்சியரின் உத்தரவின் பேரில் வாலாஜா வட்டாச்சியார் வெங்கடேசன் தலைமையில் வருவாய் துரையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் இடுப்பட்டனர். அப்போது ஜே சிபி மண் அள்ளிக்கொண்டு இருந்தது. அந்த ஜே சிபியை வருவாய் துரையினர் பறிமுதல் செய்து சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படித்தனர்.