திருவாரூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு.T.ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள் (05.11.2024) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தனிப்பிரிவு அலுவலகம், கைரேகை பிரிவு மற்றும் சமூக நீதி & மனித உரிமைகள் பிரிவு அலுவலகங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்களும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அருள்செல்வன் (சைபர் கிரைம்) அவர்களும் உடனிருந்தார்கள். முன்னதாக, நன்னிலம் உட்கோட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு செய்து, அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.