திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (23.10.2024) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், விக்கிரபாண்டியம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளை ஆய்வு செய்தும், காவல் நிலையத்தில் உள்ள துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் எண்ணிக்கையை சரிபார்த்தும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
பொதுமக்களை அச்சுறுத்தி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள். ஆய்வின் போது திருத்துறைப்பூண்டி உட்கோட்ட பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.சரவணன் அவர்கள் உடனிருந்தார்கள்.