திருச்சி: திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய எல்லையான காந்திபுரம் பகுதியில் வசித்து வந்த மாலதி (வயது 22) என்பவருக்கும்¸ அவரது கணவர் முத்துக்குமார் என்பவருக்கும், கடந்த 20.05.2016 அன்று திருமணம் நடைபெற்ற நிலையில், அவரது கணவர் மற்றும் கணவரின் வீட்டார்கள் மாலதியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்¸ மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகவும்¸ மனமுடைந்த மாலதி தனக்குதானே அவரது கணவரின் வீட்டில் தூக்குபோட்டு இறந்துவிட்டதாக அவரது தந்தை திருமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய குற்ற எண்-10/16 u/s 174(3) Crpc படி வழக்கு பதிவு செய்யப்பட்டு¸ பின்னர் இவ்வழக்கு 498(A), 304(B) r/w 34 IPC & 4 of DP Act படி சட்டப்பிரிவு மாற்றம் செய்யப்பட்டு, மேற்படி இவ்வழக்கினை ஸ்ரீரங்கம் சரகம் உதவி ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் புலன் விசாரணை செய்து முத்துக்குமார் மற்றும் அம்சவள்ளி ஆகிய இருவரையும் கடந்த 13.09.2016 தேதி கைது செய்து நீதிமன்றகாவலுக்கு அனுப்பி வைத்தார்கள்.
மேற்படி 19.12.2019-ம் தேதி இவ்வழக்கில் திருச்சிராப்பள்ளி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.வனிதா அவர்கள் விசாரணையை முடித்து 1-வது எதிரி முத்துக்குமார் மற்றும் 2-வது எதிரி அம்சவள்ளி என்பவர்களுக்கு சட்டப்பிரிவு 498 (A)-ன் கீழ் குற்றத்திற்கு தலா 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா ரூ.1000/-அபராதமும்¸ கட்டதவறினால் மேலும் ஒரு வருடம் சிறைதண்டனையும்¸ சட்டப்பிரிவு 304(B)-ன் கீழான குற்றத்திற்கு தலா 7 வருட கடுங்காவல் சிறைதண்டனையும்¸ தலா ரூ.1000/- அபராதமும்¸ கட்டதவறினால் மேலும் ஒரு வருடம் சிறைதண்டனையும்¸ மேலும் எதிரிகளுக்கு வரதட்சணை தடுப்புசட்டம் பிரிவு 4-ன் கீழான குற்றத்திற்கு தண்டனையாக தலா இரண்டு வருடம் சிறைதண்டனையும்¸ தலா ரூ.1000/- அபராதமும்¸ கட்டதவறினால் மேலும் ஒருவருடம் சிறைதண்டனையும் விதித்து, அதன்படி எதிரிகள் (1 மற்றும் 2) மேற்படி 3 பிரிவுகளின் கீழான தண்டனைகளை ஒருங்கிணைந்து ஏக காலத்தில் அனுபவிக்கும்படி தீர்ப்பு வழங்கினார்கள்.
மேற்படி வழக்கில் சிறப்பான புலன்விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி