இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட P.கீரந்தை பகுதியை சேர்ந்த சேதுபதி, த/பெ சின்னகுமார், அவரது சகோதரி சண்முகவள்ளி, க/பெ பெருமாள், உறவினர் சப்பாணி, த/பெ இராமையா ஆகியோர் சேர்ந்து கடந்த 2013-ம் தேதி சேதுபதியின் மனைவி அங்காள ஈஸ்வரி என்பவரிடம் ரூபாய் 1,00,000/- மற்றும் 10 சவரன் நகை கேட்டு கொடுமைபடுத்தியதுடன் அவரது தாலி சங்கிலியை கழற்றினர். இதனால், அங்காள ஈஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக, தற்கொலைக்கு தூண்டிய சேதுபதி, சண்முகவள்ளி மற்றும் சப்பாணி ஆகிய மூவர் மீதும் பேரையூர் காவல் நிலைய குற்ற எண் 23/13 u/s 174 CrPC @ 306, 498(A), 304(B) IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை முடிந்து, நேற்று 25.09.2019-ம் தேதி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.P.பகவதியம்மாள் அவர்கள் மேற்படி எதிரிகளான சேதுபதி, சண்முகவள்ளி மற்றும் சப்பாணி ஆகிய மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 2,000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள்.