இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு” என்பதை குறிக்கோளாக கொண்ட நியூஸ் மீடியா அசோசியன் ஆப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக வயது முதிர்ந்த தம்பதியினருக்கு கேஸ் அடுப்பு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிள்ளைகள், உறவினர்கள் என யாரும் இன்றி ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வரும் கணவன் மற்றும் மனைவி என இரண்டு முதியோர்கள் அடிப்படையான வசதிகள் ஏதும் இன்றி வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர், டியூப், ரெகுலேட்டர், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி தந்து அதைப்பயன் படுத்தும் முறையையும் கற்றுத்தரப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ. சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சமூக சேவை பிரிவு வடக்கு மண்டல பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா ஏற்பாடு செய்து வழங்கினார்.
















